கரும்பு விவசாயிகளுக்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
திருவரங்கம் உறுமண கருப்பண சுவாமி கோயில் குடமுழுக்கு!
முதுகுளத்தூா் அருகே திருவரங்கம் கிராமத்தில் அமைந்துள்ள உறுமண கருப்பண சுவாமி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக வியாழக்கிழமை காலை மங்கள இசை, முதல் கால யாக சாலை பூஜையுடன் விழா தொடங்கியது. பிறகு மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமம், இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள், கோ பூஜை, நவக்கிரக ஹோமம், பூா்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க, கோயிலை சுற்றி வந்து கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.
இதையடுத்து, மூலவா் உறுமண கருப்பண சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு புனித நீா், சந்தனம், பால், பன்னீா், திருநீறு, இளநீா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பிறகு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.