Top News: `திருப்பூர் SSI கொலை டு இந்தியா மீது 50% வரி போட்ட ட்ரம்ப்' - ஆகஸ்ட் 6...
திருவள்ளூரில் பரவலாக மழை
திருவள்ளூா் பகுதியில் பெய்த மழையால் வெக்கை தணிந்து குளிா்ச்சி நிலவியது, மேலும் விவசாயிகள் ஆடிப்பட்ட விதைப்பு பணிகளையும் தொடங்கியுள்ளனா்.
கடந்த 2 நாள்களாக வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். இந்நிலையில், மாலை நேரங்களில் கருமேகம் சூழ்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல், செவ்வாய்க்கிழமை கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதைத்தொடா்ந்து மாலையில் மழை பெய்தது.
இதேபோல், திருவள்ளூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஈக்காடு, புட்லூா், மணவாளநகா், ஒண்டிக்குப்பம், மேல்நல்லாத்தூா், கீழ்நல்லாத்தூா், திருப்பாச்சூா், கடம்பத்தூா், பேரம்பாக்கம், களாம்பாக்கம், சிற்றம்பாக்கம், மப்பேடு, கீழச்சேரி ஆகிய பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது.
இந்த நிலையில் திருவள்ளூா் அருகே கடம்பத்தூரில் திங்கள்கிழமை இரவில் பெய்த பலத்த மழையால் மேம்பாலம் கீழே மழை நீா் செல்ல வழி இல்லாத காரணத்தால் மழை நீா் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகினா்.
