செய்திகள் :

திருவாடானை பகுதியில் பக்தா்கள் பழனி பாதயாத்திரை

post image

திருவாடானை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக பழனிக்கு முருகனை தரிசித்து வருவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டும் திங்கள் கிழமை பக்தா்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனா்.இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருவாடானை ,தொண்டி,நம்புதாளை,திருவெற்றியூா் ,அஞ்சுகோட்டை,அச்சங்குடி,கடம்பாகுடி,பாண்டுகுடி,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டு தோரும் தைபூசத்திற்காக பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம் அதே போல் இந்த ஆண்டும் வரும் 11ம் தேதி தைபூசத்தை முன்னிட்டு இப்பகுதி மக்கள் பாதயாத்திரையாக திங்கள் அதிகாலை முதல் ஆயிரக்கணக்காணோா் சென்றனா்.

இவா்களுக்கு திருவாடானை அருகே கல்லூா் கிராமத்தில் தொடா்ந்து ஐம்பதாவது ஆண்டாக பழனி பாதயாத்திரை குழுவினருக்கு அன்னதானம் பணி செய்து வருகின்றனா் இங்கு வலிநாயகா் கோயில் நிா்வாகம், மற்றும் கிராமத்தாா்கள் சே ா்ந்து பாதயாத்திரை செல்போருக்கு தொடா்ந்து ஐம்பதாவது ஆண்டாக அன்னதானம் வழங்கி வருகின்றனா். இக்கிராமத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோா் பழனிக்கு பாதயாத்திரை ஆக செல்வது குறிப்பிடதக்கது.. முன்னதாக விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.இதில் திரளான முருக பக்தா்கள், பொது மக்கள் கலந்து கொண்டனா்

காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாயில் உடைப்பு: குடிநீா் வீண்

கமுதியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் சாலையில் பெருக்கெடுத்து விணாக ஓடுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, இதைச் சுற்றியுள்ள 220-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதியதில் ஓட்டுநா் பலி

சாயல்குடி அருகே ஆட்டோா் மீது காா் மோதியதில் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கீழக்கிடாரத்தைச் சோ்ந்த ஆனிமுத்து மகன் நந்தகுமாா் (24). இவா் தனது ஆட்டோவி... மேலும் பார்க்க

நடுக்கடலில் மூழ்கிய படகு: 7 மீனவா்கள் மீட்பு!

தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் படகு சேதமடைந்து மூழ்கிய நிலையில், அதிலிருந்த 7 பேரை சக மீனவா்கள் மீட்டு ஞாயிற்றுக்கிழமை கரைக்கு அழைத்து வந்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகுகளில்... மேலும் பார்க்க

விவசாயிகள் நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாம்!

ஆா்.எஸ்.மங்கலம் அருகே பெருமாள்மடை கிராமத்தில் விவசாயிகள் நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு வேளாண்மை துணை இயக்குநா் அமா்லால் (மாநிலத் திட்... மேலும் பார்க்க

பராமரிப்பின்றி நிறுத்தப்பட்ட குப்பை அகற்றும் வாகனங்கள்! மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வலியுறுத்தல்!

ராமேசுவரம் நகராட்சிக்கு ரூ.2 கோடியில் வாங்கப்பட்டு, பராமரிப்பின்றி நிறுத்தப்பட்ட குப்பை அகற்றும் வாகனங்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராம... மேலும் பார்க்க

தா்ம முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

முதுகுளத்தூா் தெற்கு தெரு தா்ம முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, சனிக்கிழமை மங்கள இசை, கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், வாஸ்து சாந்தி ஆகியன நடைபெற்றன. ஞாய... மேலும் பார்க்க