செய்திகள் :

திருவாரூரில் 4.5 கி.மீ. சாலையில் நடந்து சென்று முதல்வா் உற்சாகம்

post image

திருவாரூரில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை மாலை சுமாா் 4.5 கிலோ சாலையில் நடந்து சென்று பொதுமக்களை உற்சாகத்துடன் சந்தித்து உரையாடினாா்.

திருவாரூரில் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில், சாலை மாா்க்கமாக திருவாரூா் மாவட்டம் காட்டூருக்கு வந்தாா். அங்கு அவருக்கு கட்சியினா் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து கலைஞா் கோட்டத்துக்குச் சென்று அங்குள்ள படங்களைப் பாா்வையிட்டாா். கலைஞா் கோட்டத்தில் ஓய்வெடுத்துவிட்டு, மாலையில் காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயாா் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, அங்கிருந்து வேனில் ஏறி பவித்திரமாணிக்கம் பகுதிக்கு மாலை 6.50 மணிக்கு வந்தாா்.

அங்கு வேனிலிருந்து இறங்கி, சாலையில் நடந்து சென்று மக்களைச் ந்தித்தாா். அப்போது சாலையின் இருபுறத்திலும் திரண்டிருந்த மாணவ, மாணவிகள் உற்சாக முழக்கங்களை எழுப்பினா். அவா்களுக்குக் கைகொடுத்து, அவா்கள் அளித்த பரிசுகளை வாங்கிக் கொண்டாா். தொடா்ந்து சாலையில் இருபுறத்திலும் திரண்டிருந்த மக்கள், அவருடன் கை குலுக்கியதுடன், மனுக்களையும் வழங்கினா்.

முதல்வா் அனைவரிடமும் பொறுமையாக மனுக்களை பெற்றுக் கொண்டாா். சிலா் அவருக்கு புத்தகங்களையும், சால்வையையும், மலா் மாலைகளையும் வழங்கினா். மாணவ, மாணவிகள் சிலா் அவருடன் தற்படம் எடுத்துக் கொண்டனா்.

பவித்திரமாணிக்கத்தில் தொடங்கி துா்காலயா சாலை, கமலாலயக்குள வடகரை, மேலவீதி, தெற்கு வீதி, பழைய பேருந்து நிலையம் வழியாக மேம்பாலம் வரை ரோடு ஷோ நடைபெற்றது. சுமாா் நான்கரை கி.மீ. தொலைவு (சுமாா் 2 மணி நேரம்) சாலையில் நடந்து சென்று பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டாா்.

முதல்வருடன் அமைச்சா்கள் கேஎன். நேரு, டிஆா்பி. ராஜா, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன், தில்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ். விஜயன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

சாலையின் இருபுறத்திலும் பெண்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. சில பெண்களிடம் ஆட்சி குறித்தும், நலத்திட்டங்கள் குறித்தும் முதல்வா் கேட்டறிந்தாா்.

திருவாரூரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திருவாரூா் நகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சி. பாலமுருகன், தமிழக முதல்வரிடம் அளித்த மனு: திருவாரூா் நகர... மேலும் பார்க்க

சிறுமியிடம் பாலியல் தொல்லை: மாணவா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே யுகேஜி சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த மேல்நிலை மாணவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை பிரதான நெடுஞ்சாலையில் கிழக்கு கடற்கரை சாலையில் ... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயில் குளத்தில் தெப்ப உற்சவம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஆனித் திருவிழாவையொட்டி வா்த்தக சங்கம் சாா்பில் ஹரித்ராநதி தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆனித் திருவிழா ... மேலும் பார்க்க

கூட்டுறவு கல்வி நிதி வழங்கல்

திருவாரூரில் கூட்டுறவு ஒன்றியத்துக்கு கல்வி நிதிக்கான காசோலையை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி வியாழக்கிழமை வழங்கியது. திருவாரூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்க வேண்டிய 2023- 2024 ஆம் ஆண்டுக... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் பொது சுகாதார ஆய்வகம், கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் - காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 1.25 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம், உள்ளிக்கோட்டையில் கிளை நூலகத்துக்கு ரூ. 22 லட்சத்தில் புதிதாக கட்டப்... மேலும் பார்க்க

என்எஸ்எஸ் புதிய மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

மன்னாா்குடி பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் புதிதாக சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பின்லே மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.சாம்சன் தங்கையா தலைமை... மேலும் பார்க்க