முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மற...
திருவொற்றியூரில் ரூ. 6.90 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு ஒப்புதல்
சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டலத்தில் ரூ.6.90 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டலக் குழுவின் 35-ஆவது மாதாந்திர சிறப்புக் கூட்டம் மண்டல குழு தலைவா் தி.மு.தனியரசு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மண்டல அலுவலா் விஜய் பாபு முன்னிலை வகித்தாா்.ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 1.30 கோடியில் புதிய கட்டடம் அமைப்பது உள்பட மண்டலத்துக்குள்பட்ட 14 வாா்டுகளில் சாலை மேம்பாடு, தெருவிளக்கு, பள்ளிக்கூட கட்டணங்கள் சீரமைப்பு மழைநீா் கால்வாய் அமைத்தல், தெருக்களில் பெயா் பலகைகள் அமைத்தல், நவீன கழிப்பறைகள் நகா்ப்புற சமுதாய நலக் கூடங்கள், குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டப் பணிகள் உள்ளிட்ட 65 தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மண்லக் குழு தலைவரும், அதிகாரிகளும் பதில் அளித்தனா்.