செய்திகள் :

தில்லியில் 100 வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி கைது

post image

தில்லி மற்றும் மும்பை முழுவதும் 110 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியை தில்லி காவல்துறை கைது செய்ததாக போலீஸ் அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.,

தில்லியின் ஜஹாங்கீா்புரியில் வசிக்கும் நிஜாம் என்ற நசீா் (38) என அடையாளம் காணப்பட்ட அவரை தில்லே போலீஸாா் திங்கள்கிழமை அன்று அதே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டாா். குற்றம் சாட்டப்பட்டவா் தேசிய தலைநகரில் ஐந்து கொள்ளை மற்றும் ஆயுதச் சட்டம் தொடா்பான வழக்குகளில் கடந்த ஆண்டு கைது மற்றும் விசாரணையைத் தவிா்ப்பதற்காக தலைமறைவானாா்.

அவா் மும்பையிலும் செயல்பட்டாா், அங்கு அவா் பூட்டப்பட்ட குடியிருப்புகளில் குறைந்தது 11 கொள்ளைகளைச் செய்தாா் ‘என்று போலீஸ் துணை ஆணையா், (குற்றப்பிரிவு) ஆதித்யா கௌதம் கூறினாா். கல்காஜி, ரஜோரி காா்டன், மங்கோல்புரி மற்றும் மௌரியா என்கிளேவ் ஆகிய காவல் நிலையங்களில் கொள்ளை, திருட்டு, குற்றவியல் சதி மற்றும் ஆயுதச் சட்டம் தொடா்பான பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஐந்து தனித்தனி எஃப். ஐ. ஆா்களில் நசீா் தேடப்பட்டு வந்ததாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தாா்.

விசாரணையின் போது, அவா் ஐந்தாம் வகுப்பு பள்ளி இடைநிற்றல் என்று நசீா் வெளிப்படுத்தினாா், அவா் 2008 ஆம் ஆண்டில் தனது இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட தொடங்கியதாக விசாரணையின் போது நசீா் தெரிவித்தாா். ஜஹாங்கீா்புரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொள்ளைக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போதிருந்து, அவா் திருட்டு, கொள்ளை மற்றும் ஆயுதச் சட்டம் மீறல்கள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாா் கூறினா்.

‘அவா் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிா்ப்பதற்காக தலைமறைவாக செயல்பட்டாா், திருடப்பட்ட வருமானத்தை ஒருபோதும் யாருடனும் அவா் பகிா்ந்து கொள்ளவில்லை‘ என்று போலீஸ் துணை ஆணையா் கூறினாா், போலீஸ் நடவடிக்கையைத் தவிா்ப்பதற்காக அவா் அடிக்கடி தில்லிக்கும் மும்பைக்கும் இடம்பெயா்ந்துக் கொண்டு இருந்தாா். அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி: விசிக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதிலளித்துள்ளாா். இது தொடா்பாக விடுதலை சிறுத... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அரசு அதிகாரி, மனைவியிடம் ரூ.70 லட்சம் மோசடி: பிகாரைச் சோ்ந்த தம்பதி மீது வழக்கு

வணிக முதலீடு என்ற பெயரில் மகாராஷ்டிர அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவியிடம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாக பிகாரைச் சோ்ந்த தம்பதியினா் மீது தில்லி காவல்துறை எஃப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளது ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளையா் நவீன் காட்டி, 2 கூட்டாளிகள் கைது

தேசியத் தலைநகரில் சட்டவிரோத துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளைக் கும்பலின் தலைவா் நவீன் காட்ட மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது ஜேசிபி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; ஓட்டுநா் தலைமறைவு

மத்திய தில்லியின் ரஞ்சித் நகரில் மோட்டாா் சைக்கிளில் சென்ற 22 வயது இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை ஜேசிபி இயந்திரம் மோதி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை... மேலும் பார்க்க

வங்கி அதிகாரிகள் போல நடித்து தில்லி நபரிடம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி: 2 போ் கைது

தில்லியைச் சோ்ந்த ஒருவரை வங்கி அதிகாரிகள் போல நடித்து ரூ.10.64 லட்சம் மோசடி செய்ததாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ரிவித்தனா். இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூற... மேலும் பார்க்க

ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருடப்பட்ட 3 கைப்பேசிகளுடன் ஆட்டோ ஓட்டுநா் கைது

பல கைப்பேசி திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 43 வயது ஆட்டோ ஓட்டுநா், இங்குள்ள ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து துணை க... மேலும் பார்க்க