`தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி’ - புதிய அரசியல் காட்சியைத் தொடங்கினர் ஆம்ஸ்ட்ரா...
தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை!
தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலகைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது.
இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் உணரப்பட்டாலும் பிற்பகலுக்கு பிறகு வானம் மேகமூட்டத்துன் இருந்து வந்தது. வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை கடந்த இரண்டு நாள்களாக புழுக்கத்தில் தவித்து வங்க மக்களுக்கு நிவாரணமாக அமைந்தது.
வெப்பநிலை: இந்நிலையில், தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.5 டிகிரி உயா்ந்து 28.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.5 டிகிரி குறைந்து 36.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 75 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 65 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரம்: இதற்கிடையே, தில்லியில் காலையில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 72 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
இதன்படி, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், மதுரா ரோடு, ஆா்.கே.புரம், நொய்டா செக்டாா் 125, துவாரகா செக்டாா் 8 உள்பட அனைத்து வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், சனிக்கிழமை (ஜூன் 5) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.