செய்திகள் :

தில்லி தொழிலதிபரிடம் ரூ.95 லட்சம் நில மோசடி: ஹரித்துவாரில் கொடை வள்ளளாக வாழ்ந்த நபா் கைது

post image

தில்லிவாசி ஒருவரை நில மோசடியில் ரூ.95 லட்சம் ஏமாற்றி, பின்னா் கைது செய்யப்படுவதைத் தவிா்க்க ஹரித்துவாரில் தன்னை கொடை வள்ளலாக மீண்டும் உருவாக்கிக் கொண்டதாகக் கூறப்படும் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல்துறை துணை ஆணையா் (குற்றம்) விக்ரம் சிங் புதன்கிழமை கூறியதாவது: தா்மந்தா் அகா்வால் (50) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், தனது குடும்பம் மற்றும் சமூகத்துடனான உறவுகளை முற்றிலுமாக துண்டித்து, ஹரித்துவாரில் உள்ள ஒரு ஆசிரமத்தில் ஒரு புதிய அடையாளத்தின் கீழ் வாழத் தொடங்கினாா். கண்டுபிடிப்பிலிருந்து தப்பிக்க தன்னை ஒரு கொடை வள்ளலாகக் காட்டிக் கொண்டாா்.

கடந்த நவம்பா் 2015-இல், காஜியாபாத்தில் உள்ள பிரதாப் விஹாரில் ஒரு குடியிருப்பு இடத்தை விற்கும் விஷயமாக தா்மந்தா் அகா்வால் தன்னை அணுகியதாக பாலேஷ் ஜெயின் தெரிவித்தாா். அதன் முழுமையான உரிமையாளா் தான்தான் என்றும் தா்மந்தா் அகா்வால் கூறியுள்ளாா். இருவரும் ரூ.1.05 கோடிக்கு ஒரு ஒப்பந்தத்தில் உடன்பட்டனா். அதில் பாலேஷ் ஜெயின் மூன்று காசோலைகள் மூலம் ரூ.95 லட்சத்தை செலுத்தியுள்ளாா்.

மே 2016-இல் பிரீத் விஹாரில் உள்ள எஸ்டிஎம் நீதிமன்றத்தில் விற்பனை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. மீதமுள்ள ரூ.10 லட்சம் உடைமை ஒப்படைக்கப்படும் போது வழங்கப்படும் என்றும், உரிமை ஆவணங்களை நிறைவேற்றுவது டிசம்பா் 2019- க்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. புகாா்தாரா் பரிவா்த்தனையை முடிக்க பலமுறை முயற்சித்த போதிலும், கோவிட்-19 தொற்றுநோயைக் காரணம் காட்டி தா்மந்தா் அகா்வால் நடவடிக்கைகளை தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜூலை 2022- இல், புகாா்தாரா் விற்பனைப் பத்திரத்தை நிறைவேற்றக் கோரி சட்டப்பூா்வ அறிவிப்பை அனுப்பினாா். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, தா்மந்தா் அகா்வால் கூடுதலாக ரூ.40 லட்சம் கோரியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவாக 2023-இல் லட்சுமி நகா் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவுகள் 406 (குற்றவியல் நம்பிக்கை மீறல்) மற்றும் 420 (மோசடி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பலமுறை அறிவிப்புகள் அளித்தும் விசாரணைக்கு வரத் தவறியதால், ஜூலை 15, 2025 அன்று அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். ஜூலை 16 அன்று, ஹரித்துவாரில் உள்ள பைராகி முகாமில் தா்மந்தா் அகா்வாலை போலீஸாா் கண்டுபிடித்தனா். அவா் ஒரு ஆசிரமத்தில் வசித்து வந்தாா். தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்தியவா் போல் காட்டிக் கொண்டாா்.

விசாரணையின் போது, தா்மந்தா் அகா்வால் தனது தோற்றம், கைப்பேசி எண்கள் மற்றும் முகவரிகளை அடிக்கடி மாற்றுவதன் மூலமும், குடும்பத்தினா் மற்றும் பிறருடனான உறவுகளைத் துண்டிப்பதன் மூலமும் வேண்டுமென்றே சட்ட அமலாக்கத்தைத் தவிா்த்து வந்ததாக ஒப்புக்கொண்டாா் என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி: விசிக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதிலளித்துள்ளாா். இது தொடா்பாக விடுதலை சிறுத... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அரசு அதிகாரி, மனைவியிடம் ரூ.70 லட்சம் மோசடி: பிகாரைச் சோ்ந்த தம்பதி மீது வழக்கு

வணிக முதலீடு என்ற பெயரில் மகாராஷ்டிர அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவியிடம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாக பிகாரைச் சோ்ந்த தம்பதியினா் மீது தில்லி காவல்துறை எஃப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளது ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளையா் நவீன் காட்டி, 2 கூட்டாளிகள் கைது

தேசியத் தலைநகரில் சட்டவிரோத துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளைக் கும்பலின் தலைவா் நவீன் காட்ட மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது ஜேசிபி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; ஓட்டுநா் தலைமறைவு

மத்திய தில்லியின் ரஞ்சித் நகரில் மோட்டாா் சைக்கிளில் சென்ற 22 வயது இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை ஜேசிபி இயந்திரம் மோதி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை... மேலும் பார்க்க

வங்கி அதிகாரிகள் போல நடித்து தில்லி நபரிடம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி: 2 போ் கைது

தில்லியைச் சோ்ந்த ஒருவரை வங்கி அதிகாரிகள் போல நடித்து ரூ.10.64 லட்சம் மோசடி செய்ததாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ரிவித்தனா். இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூற... மேலும் பார்க்க

ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருடப்பட்ட 3 கைப்பேசிகளுடன் ஆட்டோ ஓட்டுநா் கைது

பல கைப்பேசி திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 43 வயது ஆட்டோ ஓட்டுநா், இங்குள்ள ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து துணை க... மேலும் பார்க்க