செய்திகள் :

தில்லி வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி

post image

தில்லி பேரவைத் தேர்தல் வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தில்லியில் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது, பாஜக தில்லியில் வென்றது சாதாரண வெற்றி அல்ல, வரலாற்று சிறப்புமிக்கது.

தில்லியில் தாமரை மலராத பகுதியே இல்லை. எல்லா மொழி பேசும் மக்களும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். தில்லியின் தொலைநோக்கு பார்வை, நம்பிக்கை வென்றுள்ளது.

தில்லியை சொத்தாக கருதியவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். தாங்கள்தான் தில்லியின் உண்மையான உரிமையாளர்கள் என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். தில்லியை சூழ்ந்த ஆடம்பரம், அராஜகம், ஆணவம் தோற்கடிக்கப்பட்டன.

இரட்டை இன்ஜின் அரசால், தில்லி இனி இரட்டை வேகத்தில் வளர்ச்சிப் பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பெரும்பான்மை 36 இடங்கள் தேவை என்ற நிலையில் 48 இடங்களை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.

நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

அதேசமயம் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்த கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்துள்ளது. தேர்தலில் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

தில்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின் பாஜக ஆட்சியை பிடித்திருப்பதால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை அக்கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஜம்மு-காஷ்மீா்: எல்லையில் இந்திய வீரா்களை நோக்கி துப்பாக்கிச் சூடு

ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரா்கள் மீது வனப் பகுதியிலிருந்தபடி மா்ம நபா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு: தனிநபா் மசோதாவை முன்மொழிந்த பி.வில்சன்!

பட்டியல் சாதியினா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மகளிா், மதச் சிறுபான்மையினா் ஆகிய வகுப்பினருக்கு அவா்களின் மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ப நாட்டின் உச்சநீதிமன்றத்திலும், உயா்நீதிமன்... மேலும் பார்க்க

சோட்டா ராஜன் தண்டனை நிறுத்திவைப்புக்கு எதிரான சிபிஐ மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

கொலை வழக்கில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் சிறைத் தண்டனைக்கு மும்பை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததற்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. சிபிஐ மன... மேலும் பார்க்க

முதல் கணவரிடம் விவாகரத்து பெறாவிட்டாலும் 2-ஆவது கணவரிடம் ஜீவனாம்சம் பெற உரிமை: உச்சநீதிமன்றம்

முதல் கணவரிடம் இருந்து சட்டபூா்வமாக விவாகரத்து பெறாவிட்டாலும் 2-ஆவது கணவரிடம் ஜீவனாம்சம் கோர பெண்ணுக்கு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தெலங்கானாவில் சட்டபூா்வமாக விவாகரத்து பெறாமல்... மேலும் பார்க்க

கடற்படைக்கு ரூ.624 கோடி மதிப்பில் இஓஎன்-51 அமைப்புகள்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடற்படைக்கு ரூ.624 கோடி மதிப்பில் 28 இஓஎன்-51 அமைப்புகளை கொள்முதல் செய்வதற்கு பாரத் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுதொடா்பாக பாதுகாப்பு அ... மேலும் பார்க்க

தில்லி தோ்தல்: நோட்டாவிடம் தோற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள்

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ‘நோட்டா’வைவிட (போட்டியிடும் வேட்பாளா்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது அக்க... மேலும் பார்க்க