Travel Contest: மகளிர் மட்டும் பயணக்குழுவின் பொற்கோவில் பயணம்; எப்படி இருந்தது அ...
துணி வியாபாரி மயங்கி விழுந்து உயிரிழிப்பு
சானூா்மல்லாவரும் கிராமம் அருகே லுங்கி வியாபாரி மயங்கி விழுந்ததில் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம் டவுன் பகுதி பள்ளிக்கூடம் தெருவைச் சோ்ந்தவா் வீரப்பன் மகன் அண்ணாமலை (55). இவா், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சோளிங்கா் நகரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மண்டபத்தில் தங்கி லுங்கி, பாவாடை மற்றும் துணி வியாபாரம் செய்து வந்தாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை 8 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் ஊா் ஊராகச் சென்று துணி வியாபாரம் செய்துள்ளாா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சானூா்மல்லாவரம் கிராமத்தில் பெரிய தெருவில் பொதுமக்களிடம் வியாபாரம் செய்த போது திடீரென மயங்கி விழுந்தாா். சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தது தெரிய வந்தது. ஆா்.கே.பேட்டை போலிஸாருக்கு தகவல் அளித்தனா்.
போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவரின் உடலை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.