செய்திகள் :

துணைவேந்தர்கள் நியமனம்: "4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்" - உச்ச நீதிமன்றம்

post image

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

அதில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களின் நியமிக்கும் அதிகாரத்தை மாநில முதல்வருக்கு வழங்கும் மசோதாவும் ஒன்று.

ஆளுநர் தேவையற்ற கால தாமதம் செய்கிறார் எனக்கூறி தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குறிப்பிட்ட அந்த 10 மசோதாக்களுக்கும் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இதனையடுத்து அந்த மசோதாக்களை சட்டமாக அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதேசமயம், துணைவேந்தர்களின் நியமிக்க மாநில முதல்வருக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி பா.ஜ.க-வை சேர்ந்த வழக்கறிஞரான வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு மீது கடந்த மே 21-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் விரிவான விசாரணையை மேற்கொண்டனர்.

அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஏற்கனவே இந்த குறிப்பிட்ட மனுவை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி ட்ரான்ஸ்பர் மனு தாக்கல் செய்திருப்பதாகவும், எனவே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது எனவும் வாதங்களை முன் வைத்திருந்தனர்.

ஆனால் அந்த வாதங்களை நிராகரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட மேல்முறையீட்டு செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் விடுமுறை கால சிறப்பு அமர்வு

நீதிபதிகள் பி.வி.நரசிம்மா, ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இதில், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ராகேஷ் திவேதி, வில்சன் ஆகியோர், "உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் இருக்கும் மனு குறித்த விவரங்களை எடுத்து சொல்லியும்கூட அதைக் கவனத்தில் கொள்ளாமல் சென்னை உயர் நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு அவசர அவசரமாக இந்த வழக்கை விசாரித்து இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருக்கின்றது.

எனவே இந்த உத்தரவுக்குத் தடை விதிப்பதோடு, ஜூலை இரண்டாம் உயர் நீதிமன்ற விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும்." எனக் கோரிக்கை வைத்தனர்.

உத்தரவு
உத்தரவு

அப்போது யு.ஜி.சி சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இதை ஏற்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்தார்

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவில், வெங்கடாசலபதி, மத்திய அரசு, ஆளுநர் மாளிகை, யு.ஜி.சி நான்கு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பது குறித்து அடுத்த விசாரணையின்போது முடிவு செய்யலாம் என்று கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

MAHER UNIVERSITY: மெஹர் பல்கலை வேந்தர் இல்லத் திருமண விழா!

சென்னை, மீனாட்சி மற்றும் ஸ்ரீமுத்துக்குமரன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மறைந்த திரு.A.N ராதாகிருஷ்ணன் - திருமதி. கோமதி ராதாகிருஷ்ணன் அவர்களின் பேரனும், திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன் திரு. பிரபாகர் எ... மேலும் பார்க்க

Tantea:‌ `உடலை உரமாக்கி உழைக்கும் எங்கள் சாவுக்கு டிராக்டரை அனுப்புகிறது அரசு'- தொழிலாளர்கள் குமுறல்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இலங்கையின் மலைப்பிரதேசங்களில் தேயிலை, காஃபி பயிர்களுக்கான பெருந்தோட்டங்கள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டன. காடு, மலைகளை‌ அழித்து தோட்டங்களை உருவாக்க தமிழ்நாட்டின் ... மேலும் பார்க்க

`உங்களைப் பார்த்தால் பயமா இருக்கு..’ - கொதித்துப் பேசிய கவுன்சிலர்கள்; மரபை மீறிய வேலூர் மேயர்!

வேலூர் மாநகராட்சியில், நிர்வாகச் சொதப்பல் காரணமாக பல்வேறு பணிகளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் குவிந்திருக்கின்றன. இந்த நிலையில், மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று மதியம் நடைபெற்ற மா... மேலும் பார்க்க

Ration goods: கவனம் பெரும் `இல்லம் தேடி ரேஷன்' - முதல்கட்ட சோதனையில் 10 மாவட்டங்கள்!

தமிழ் நாட்டில் சென்னை, ராணிப்பேட்டை உள்பட 10 மாவட்டங்களில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் ஜூலை 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற... மேலும் பார்க்க

வி.சி.க பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை; காவல்துறையில் சரணடைந்த கணவர்!?

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண் கவுன்சிலரை கொலை செய்ததாக அவரது கணவர் காவல்துறையில் சரணடைந்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கோமதியும், ஸ்டீபன்ராஜும் க... மேலும் பார்க்க

நாட்றம்பள்ளி: விகடன் செய்தி எதிரொலி; பொதுமக்களுக்கு நிழற்குடை அமைக்கும் பணியில் அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள நாட்றம்பள்ளி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர். இப்பகுதியில் ... மேலும் பார்க்க