அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
துணை முதல்வர் நிகழ்ச்சியில் பறந்து வந்த டிரோன்! 2 பேர் கைது!
மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் நிகழ்ச்சியில் அனுமதியின்றி டிரோனை பறக்கவிட்ட 2 பேர் இன்று (பிப்.14) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாசிக் மாவட்டத்தின் ஹிவாலி பகுதியிலுள்ள ஜில்லா பரிஷாத் பள்ளிக்கூடத்திற்கு அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே வருகைத் தந்தார். அப்போது, பாதுகாப்புப் படையினரிடன் அனுமதியின்றி டிரோன் ஒன்று அங்கு பறந்ததுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த டிரோனை கீழே கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதனை இயக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், இதில் தொடர்புடைய புகைப்பட ஸ்டுடியோ உரிமையாளர் ஒருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் பலி! மருத்துவர்களின் அலட்சியத்தால் போராட்டம்?
இதுகுறித்து, அம்மாநில காவல் துறையினர் கூறியதாவது இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்திற்கு பின்னால் சந்தேகப்படும்படியான எந்தவொரு நோக்கமும் இல்லையென்றும், துணை முதல்வர் நிகழ்ச்சியின் நல்ல புகைப்படங்களுக்காக மட்டுமே அவர்கள் டிரோனை பறக்கவிட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.