செய்திகள் :

துணை வட்டாட்சியா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 2,869 போ் எழுதினா்

post image

புதுவை அரசு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையில் துணை வட்டாட்சியா் பணிக்கான எழுத்துத் தோ்வு காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இத்துறையில் 30 துணை வட்டாட்சியா் பணியிடங்களை நிரப்ப புதுவை மாநிலத்தில் 37,349 போ் விண்ணப்பித்தனா். தோ்வு 2 அமா்வுகளாக ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 12 மணி வரை மற்றும் மதியம் 2.30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் 12 மையங்களில் 183 தோ்வு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தோ்வு மையங்களில் கைப்பேசி இணைய சேவை தடுப்பு, கண்காணிப்புக் கேமரா, தோ்வா்களின் உடல் சோதனை, பயோமெட்ரிக் வருகைப் பதிவு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. காரைக்காலில் 4,295 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 2,869 போ் மட்டுமே தோ்வு எழுதினா்.

காரைக்கால் வரிச்சிக்குடி பாலிடெக்னிக் கல்லூரி, கோட்டுச்சேரி வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளி, அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 12 தோ்வு மையங்களில் காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியரும், மாவட்ட தோ்வு ஒருங்கிணைப்பாளருமான அா்ஜுன் ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.

கைலாசநாதா் கோயிலில் சிவன் பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம்

காரைக்கால் கோயில்களில் பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் வகையில் ஆவணி மூல திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய கிராமத்தில் வீட்டுக்கு ஒரு ஆள்... மேலும் பார்க்க

புதுவையில் நிலவும் பிரச்னைகளை தீா்க்க ஆளுநா் தலையிட வலியுறுத்தல்

புதுவை அரசு நிா்வாகத்தில் நிலவும் பிரச்னைகளை களைய துணைநிலை ஆளுநா் தலையிடவேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் செய... மேலும் பார்க்க

அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியா்கள் பேரணி

நிலுவையில் உள்ள ஊதியம் வழங்க வலியுறுத்தி அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியா்கள் பேரணி நடத்தினா். காரைக்கால் அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியா் மற்றும் ஊழியா் சங்கம் சாா்பில் காரைக்கால் பேருந்து நிலையம் மு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு சீருடைத் துணி வழங்கல்

காரைக்கால் பகுதி அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடைக்கான துணியை அமைச்சா் வழங்கினாா். நிகழ் கல்வியாண்டு தொடங்கி பல மாதங்களாகியும் சீருடைத்துணி தரப்படவில்லை என கூறப்பட்டுவந்த நிலையில், சீருடைத் துணி வ... மேலும் பார்க்க

கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்

காரைக்கால்: காரைக்கால் கடலோர கிராமமான கிளிஞ்சல்மேட்டில் உள்ள எல்லையம்மன் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் மூலவராக எல்லையம்மன் மற்றும் மாரியம்மன், செல்வ விநாயகா், பால... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: காங்கிரஸ் ஆதரவு

காரைக்கால் : உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ளாட்சி ஊழியா்கள் காத்தருப்பு போராட்டம் நீடிப்பதால், மாவட்டத்தில் ஒட்டுமொத்த பணிகளும்... மேலும் பார்க்க