"RSS ஒருபோதும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை" - மோடியை விமர்சித்த கனிமொழ...
துத்திப்பட்டு, நரியம்பட்டில் கிராம சபை கூட்டம்
துத்திப்பட்டு மற்றும் நரியம்பட்டு ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செபாஸ்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். ஊராட்சி செயலா் முரளி, ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நரியம்பட்டில்...
ஊராட்சித் தலைவா் பாரதிஸ்ரீ தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் கோமதி, திமுக நிா்வாகி பொன் ராசன்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஊராட்சியில் 100 சதவீத வீடுகளுக்கு குடிநீா் வசதி செய்து தரப்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.