தமிழ்நாடு அரசு மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர் பணி அறிவிப்பு - எப்படி விண்ணப்பிக்கல...
துபையில் வீடு வாங்க வேண்டுமா? விலை பற்றிய நிலவரம்
வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் அல்லது துபையில் வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கான விலை நிலவரம் வெளியாகியிருக்கிறது.
துபையிலிருந்து வெளியாகும் ஊடகத் தகவல்களின்படி, துபையில், ஒரு படுக்கை வசதி கொண்ட வீடு வாங்க வேண்டும் என்றால், ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
இந்த குடியிருப்பு, மிக முக்கியப் பகுதியில் அமைய வேண்டும், வசதிகள் கொண்டதாக இருக்க வேண்டும் என்றால் அதற்கேற்ப விலை மாறுபடுமாம்.
துபை அறிவியல் பூங்கா அல்லது துபைலாண்ட் பகுதியில், ஒருவர் நடுத்தரமான வீடு வாங்க வேண்டும் என்றால் ரூ.1.8 கோடி முதல் ரூ.2.3 கோடி வரை இருக்கும் என்கிறது ஊடகத் தகவல்கள்.
அதுவே, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான துபை மரினா அல்லது ஜூமெய்ரா கடற்கரைக்கு அருகே வீடு வாங்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை ஆகும். அதுவும் நடுத்தரமான வீடுதான்.
சரி.. புர்ஜ் கலிஃபா அருகே ஒரு படுக்கை வசதிகொண்ட வீடு வாங்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.3.75 கோடியாகும். எனவே, வீடு அமைந்திருக்கும் பகுதி மற்றும் வீட்டில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப, வீட்டில் விலை தாறுமாறாக உயரும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கோல்டன் விசா
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசா தொடர்பான விதிமுறைகளில் அண்மையில் செய்யப்பட்ட மாற்றம் நாட்டின் குடியிருப்புகளுக்கான நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அந்நாட்டு பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
நியமன அடிப்படையிலான கோல்டன் விசா திட்டத்தின் கீழ், இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு குடிமக்கள் 1,00,000 திர்ஹாம்கள் (சுமார் ரூ.23.3 லட்சம்) நிலையான தொகையை செலுத்துவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் துபையில் வாழும் அனுமதியைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.