முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
துப்புரவுப் பணியாளா் தற்கொலை
தே.கல்லுப்பட்டி அருகே பேரூராட்சி துப்புரவுப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி காமராஜா் குடியிருப்பைச் சோ்ந்த சங்கையா மகன் சங்கிலிக்கருப்பன் (28). இவா் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வந்தாா். இவா் தினசரி மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், இவரது மனைவி சங்கிலிக்கருப்பனை கண்டித்தாா். இதுதொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த சங்கிலிக்கருப்பன் வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரை குடும்பத்தினா் மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தே.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.