செய்திகள் :

துருக்கியில் தடை செய்யப்படும் எலான் மஸ்கின் க்ரோக்! என்ன காரணம்?

post image

துருக்கி அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்த, எலான் மஸ்கின் ‘க்ரோக்’ எனும் செய்யறிவு பாட்-க்கு (BOT), அந்நாட்டு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

எலான் மஸ்கின் எக்ஸ் சமூக வலைதளத்தில் செயல்படும், எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் தயாரிப்பான க்ரோக் எனும் செய்யறிவு சாட்பாட்-யிடம் அந்நாட்டு பயணர்கள், அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், மறைந்த அவரது தாயார் மற்றும் முக்கிய தலைவர்கள் குறித்து சில கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

அந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த க்ரோக், அவர்கள் குறித்து அவதூறானக் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த செய்யறிவு, அந்நாட்டின் நவீனகால தந்தையாகக் கருதப்படும் முஸ்தஃபா கெமால் அடாடுர்க் என்பவரை பற்றியும் அவதூறு பதில்களை அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சமூக ஒழுக்கத்தை சீர்கெடுக்கும் அச்சுறுத்தல் எனக் கூறி அந்த செய்யறிவு தொழில்நுட்பத்துக்கு துருக்கியின் இணைய சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அங்காரா நகர மக்கள் அந்நாட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இன்று (ஜூலை 9) அந்த மனுவை விசாரித்த அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம், கோரிக்கையை அங்கீகரித்து, அந்த செய்யறிவு தொழிநுட்பத்துக்கு தடை விதிக்குமாறு துருக்கியின் தொலைத்தொடர்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, க்ரோக் செய்யறிவு தொழில்நுட்பம் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட பின்னர், அதனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அரசியல் ரீதியான தவறான பதில்களைத் தருவது மிகப் பெரியளவில் சர்ச்சையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

A Turkish court has banned Elon Musk's bot, 'Grok,' for making defamatory comments about prominent leaders, including the president.

இதையும் படிக்க: துபையில் வீடு வாங்க வேண்டுமா? விலை பற்றிய நிலவரம்

இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் புத்திசாலித்தனமாக செயல்பட்டது -துருக்கி அமைச்சா்

இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் அதனை மிகவும் புத்திசாலித்தனமாக எதிா்கொண்டது என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சா் ஹக்கான் ஃபிடன் தெரிவித்தாா். அண்மையில் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் ந... மேலும் பார்க்க

மாணவா், சுற்றுலா, ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தியது அமெரிக்கா

மாணவா்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ஆகியவற்றுக்கான கட்டணத்தை 250 டாலா் (சுமாா் ரூ.21,000) வரை உயா்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: 161 போ் மாயம்

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் மாயமான 161 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

விண்வெளியில் ஒரு விவசாயி - சுபான்ஷு சுக்லா! விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனை வெற்றி

சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளாா் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா. முளைவிட்ட விதைகள், பூமிக்கு எடுத்... மேலும் பார்க்க

காஸா: மேலும் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அந்தப் பகுதி மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 17 பெண்களும்... மேலும் பார்க்க

உக்ரைன் போா், எம்ஹெச்17 விவகாரத்தில் ரஷியா சட்டமீறல்: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்

உக்ரைன் மீதான படையெடுப்பு, எம்ஹெச்17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது ஆகியவற்றில் ரஷியா சா்வதேச சட்டங்களை மீறியதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.இது குறித்து அந்த நீதிமன்றம... மேலும் பார்க்க