Gangaikonda Cholapuram Temple History | கங்கைகொண்ட சோழபுரம் கோயில் உருவான வரலாறு...
துர்நாற்றம் வீசும் 'கார்ப்ஸ் பூ' பூப்பதை காண திரண்ட மக்கள் - என்ன காரணம் தெரியுமா?
போலந்து நாட்டில் உள்ள வார்சா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான, வார்சா தாவரவியல் பூங்காவில் துர்நாற்றம் வீசும் கார்ப்ஸ் பூ ( Corpse flower) பூப்பதை காண ஏராளமான மக்கள் கூடியுள்ளனர்.
இந்த அரிய வகை தாவரம் அதன் தனித்துவமான தோற்றத்திற்கும் அதிகமான துர்நாற்றத்திற்கும் பெயர் பெற்றதாக உள்ளது. இருப்பினும் இதன் அழகையும் அசாதாரணமான அதன் தன்மையும் காண பலரும் விரும்புகின்றனர்.
இந்த கார்ப்ஸ் பூ அழிந்து வரும் தாவர வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இது கடைசியாக 2021 ஆம் ஆண்டு பூத்த போது நான்கு முதல் ஆறு மணி நேரம் மட்டுமே நிலைத்தன்மையில் இருந்துள்ளது. இந்த முறை பார்ப்பதற்கு அபூர்வமான நிகழ்வாக உள்ளதால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பூவின் துர்நாற்றம் கெட்டுப்போன இறைச்சியை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது. தாவரவியல் பூங்காவில் பூத்திருக்கும் இந்த பூவை உலகம் முழுவதிலும் உள்ள தாவர ஆர்வலர்கள் கண்டு ரசிக்கின்றனர்.
இந்தப் பூவின் பூப்பு சில மணி நேரங்கள் மட்டுமே நீடித்திற்கும் என்பதால் இதனை காண்பது மிகவும் அரிதான அனுபவமாக கருதப்படுகிறது.
எனவே இதனை பார்க்க ஏராளமான மக்கள் அங்கு குவிகின்றனர். இந்த நிகழ்வை அவர்களின் தொலைபேசிகளிலும் பதிவு செய்கின்றனர்.
இந்த கார்ப்ஸ் பூ இயற்கையிலேயே துர்நாற்றம் வீசும் ஒன்றாக அமைந்துள்ளது. அரிதாக பூக்கும் இந்த பூவினை தாவரவியல் ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு முக்கிய நிகழ்வாகவே கருதுகின்றனர்.
இந்த அரிய வகை தாவரத்தை பாதுகாக்கவும் இதன் தனித்துவத்தை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துரைக்கவும் முயற்சிகள் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.