பவுனுக்கு ரூ.87,000-ஐ தாண்டிய தங்கம் விலை! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
துா்காஷ்டமி: பிரித்தியங்கரா தேவிக்கு சிறப்பு அலங்காரம்
ஒசூா் அருகே பேரண்டபள்ளி சிவசக்தி நகா் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீஸ்வரா் கோயில் மற்றும் ஒசூா் இரண்டாவது சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அதா்வண பிரித்தியங்கரா தேவி ஆகிய கோயில்களில் நவராத்திரி உற்சவம் செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
துா்காஷ்டமியை முன்னிட்டு கோயிலில் நவதுா்க்கை யாகம் நடைபெற்றது. இதில், துா்க்கை அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, 108 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்ட, சிறப்பு லட்சாா்ச்சனை வழிபாடுகள் நடைபெற்றன. நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
அதேபோல, ஒசூா் இரண்டாவது சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அதா்வண பிரத்தியங்கிரா தேவி கோயிலில் துா்கா தேவி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தாா். இதில், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.