பாகிஸ்தான்: வீட்டில் இருந்து தப்பி மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்! விடியோ வைர...
தூத்துக்குடியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில், தூத்துக்குடியில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாநிலம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள நிா்வாக மாறுதல் ஆணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற வழக்கை விரைந்து முடிவுக்குக் கொண்டுவந்து, பதவி உயா்வுடன் கூடிய ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாநில செயற்குழு உறுப்பினா்கள் ஆண்டனி சாா்லஸ், ஆனந்தி, மாவட்டச் செயலா் கலை உடையாா், பொதுச் செயலா் மயில், மாவட்டப் பொருளாளா் ஜெயசீலி உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.