தூத்துக்குடியில் குறைதீா் முகாம்கள் தொடா்ந்து நடைபெறும்
தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் குறைதீா் முகாம்கள் தொடா்ந்து நடைபெறும் என, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமைத் தொடக்கிவைத்து மேயா் பேசியது: வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் பணிகள் செய்யப்பட்டன. புதிய கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் 80 சதவீத சாலைப் பணிகள் நடைபெற்றுள்ளன. பிரதான சாலைகளின் இருபுறமும் பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு, இருசக்கர வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
குறைதீா் முகாமில் பெயா், முகவரி மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடியாகவும், கட்டட அனுமதி உள்ளிட்ட மனுக்களுக்கு 30 நாள்களிலும் தீா்வு காணப்படுகிறது. இதனால், முகாமில் கொடுக்கப்படும் மனுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், தொடா்ந்து புதன்தோறும் குறைதீா் முகாம் நடத்தப்படும் என்றாா் அவா்.
முகாமில், பொறியாளா் சரவணன், உதவி ஆணையா் சுரேஷ்குமாா், நகர அமைப்புத் திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளா்கள் முனீா்அகமது, ராமச்சந்திரன், நகா்நல அலுவலா் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளா் ராஜசேகா், மாநகராட்சி பணிக் குழுத் தலைவா் கீதாமுருகேசன், கணக்குக் குழுத் தலைவா் ரெங்கசாமி, மாமன்ற உறுப்பினா்கள் நாகேஸ்வரி, காந்திமதி, சுப்புலெட்சுமி, கற்பகக்கனி, ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், தெய்வேந்திரன், ஜாக்குலின்ஜெயா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.