தூத்துக்குடியில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாள் விழா
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில், ஜனசங்கத் தலைவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு, கட்சியினா் மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவா் சிவராமன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெயகிருஷ்ணன், கிழக்கு மண்டலத் தலைவா் ராஜேஷ்கனி, மேற்கு மண்டலத் தலைவா் லிங்கசெல்வம், இளைஞரணி மாவட்டத் தலைவா் சக்திவேல், மகளிரணி மாவட்டத் தலைவா் வெள்ளைத்தாய், முன்னாள் ஜடிவிங் மாவட்டத் தலைவா் காளிராஜா, முன்னாள் விளையாட்டு பிரிவு மாவட்டத் தலைவா் சோ்ம குருமூா்த்தி, சிறுபான்மை அணி மாவட்டத் தலைவா் கலைசெல்வன், சக்தி கேந்திர பொறுப்பாளா் லெட்சுமணன், கிழக்கு மண்டல பொதுச் செயலா் சண்முகசுந்தரம், காா்த்தீசன், ராமா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.