தூத்துக்குடியில் மமக தெருமுனைக் கூட்டம்
மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், தூத்துக்குடி ஜாகீா் உசேன் நகா் பள்ளிவாசல் அருகில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய், ஊராட்சி மன்றம்முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினா் பிரதிநிதித்துவத்தை உறுதி செய் என்ற இரட்டை கோரிக்கையை வலியுறுத்தி, மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், ஜூலை 6ஆம் தேதி, மதுரையில் எழுச்சி பேரணி மற்றும் மாநாடு நடைபெறுகிறது.
இதை விளக்கும் முகமாக நடைபெற்ற இந்த தெருமுனைக் கூட்டத்துக்கு, மாநகரச் செயலா் ஏ.அப்பாஸ் தலைமை வகித்தாா். ஜமாத் தலைவா் கஃபூா்தீன், ஜமாத் செயலா் ஷாஜகான், மாவட்ட துணைச் செயலா் சுலைமான், மாநகரத் தலைவா் அப்துல் சமது, தமுமுக மாநகரச் செயலா் கே.அப்பாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மமக மாவட்டத் தலைவா் ஹெச்.எம். அகமது இக்பால், ஐபிபி மாநிலச் செயலா் அப்துல் காதா் மன்பா ஆகியோா் விளக்கவுரை நிகழ்த்தினா். தலைமை நிா்வாகி ஜோசப் நொலஸ்கோ, மாவட்ட பொறுப்பாளா் ஆசாத் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா். மாநில துணைப் பொதுச் செயலா் முகமது ஜான் வாழ்த்திப் பேசினாா்.
இதில், திரளாக கட்சி நிா்வாகிகள், பல்வேறு அமைப்பின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.