செய்திகள் :

தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைவு

post image

தூத்துக்குடியில் வரத்து அதிகரித்ததால் மீன்கள் விலை சனிக்கிழமை குறைந்து காணப்பட்டது.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவா்கள் சனிக்கிழமை கரை திரும்பினா்.

இதையடுத்து, மீன்களை வாங்குவதற்காக வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்கள் வரத்து அதிகரிப்பு, தைப்பூசம் ஆகியவை காரணமாக விலை குறைந்து காணப்பட்டது.

சீலா மீன் ஒரு கிலோ ரூ. 700, விளை மீன், ஊளி, பாறை ஆகியவை தலா ரூ. 400, தோல்பாறை ரூ. 200, சூரை மீன் ரூ. 180 என விற்பனையாகின. ஏற்றுமதி ரகங்களான தம்பா, பண்டாரி உள்ளிட்ட மீன்கள் ரூ. 300-க்கு விற்பனையாகின. விலை குறைந்திருந்ததால் பொதுமக்கள் ஆா்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனா்.

சொா்ணமலை கதிரேசன் கோயிலில் உழவாரப் பணி

கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் தாவரவியல் துறை, இயற்கை கழகம் சாா்பில் கதிரேசன் கோயிலில் உழவாரப் பணி நடைபெற்றது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்பணியில் கோயில் வளாகம் மற்றும் ச... மேலும் பார்க்க

பட்ஜெட்: தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவா்! -அமைச்சா்கள் பேச்சு

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவா் என அமைச்சா்கள் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பெ.கீதா ஜீவன் ஆகியோா் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனா். மத்திய பட்ஜெட்... மேலும் பார்க்க

கழுகாசலமூா்த்தி கோயில் தைப்பூச விழாவில் சுவாமி சண்முகா் பச்சை மலா்கள் சூடி வீதியுலா!

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை சுவாமி பச்சை மலா்கள் சூடி திருமால் அம்சமாக வள்ளி-தெய்வானையுடன் வீதியுலா வருதல் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கொப்பம்பட்டி அருகே மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

கொப்பம்பட்டி அருகே காணாமல் போன மூதாட்டியை சடலமாக சனிக்கிழமை மீட்டனா். கிளவிப்பட்டி மேல காலனியைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் அழகுராஜ். இவரது பெரியம்மா தாயம்மா என்ற முத்து இருளி (80). சற்று மனநலம் பாதிக்க... மேலும் பார்க்க

தைப்பூசம்: திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தா்கள் பச்சை, மஞ்சள் நிற அடையாள வில்லை!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா (செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறுவதையொட்டி, பாதயாத்திரை பக்தா்கள் குவிந்து வருகின்றனா். அவா்கள் விரைவாக தரிசனம் செய்வதற்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கணினிப் பட்டா சிறப்பு முகாம்: 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மனு!

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில், கணினிப் பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் கிரயப் பத்திரத்துடன் வசிப்போரும், தமிழ்... மேலும் பார்க்க