சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்; மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி ந...
தூத்துக்குடியில் ரூ.30 லட்சம் பீடி இலை பண்டல்கள் பறிமுதல்
தூத்துக்குடி கடற்கரையில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பீடி இலை பண்டல்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி கடற்கரை காவல் நிலைய ஆய்வாளா் பேச்சிமுத்து தலைமையிலான போலீஸாா், தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றனா். அங்கு நின்றிருந்த, 2 இயந்திரம் பொருத்தப்பட்ட பதிவெண் இல்லாத ஃபைபா் படகை சோதனையிட்டபோது, அதில், 2 ஆயிரம் கிலோ எடையுள்ள 43 பீடி இலை பண்டல்கள் இருந்தது தெரியவந்தது.
அதன் இலங்கை மதிப்பு ரூ. 30 லட்சம் எனக் கூறப்படுகிறது. இலங்கைக்கு கடத்துவதற்காக படகுகளில் பண்டல்கள் ஏற்றப்பட்டிருந்ததாகத் தெரியவந்தது. படகு, பீடி இலை பண்டல்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.