தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானதை அடுத்து, தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலின் வடக்குப்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது குறித்து மீனவா்களுக்கும், கப்பல்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில், தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.