எஸ்.ஐ. பணியிடம்: பதவி உயா்வு, நேரடி நியமனத்துக்கு இனி பொதுவான தோ்வு: தமிழக அரச...
சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாததால் அரசு பேருந்துகள் நிறுத்தம்; பயணிகள் அவதி
மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே உள்ள சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாத அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு சாலைப்புதூரில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சுங்கச் சாவடியை கடந்து செல்கின்றன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பாஸ்டேக்-ல் பணம் இல்லை என கூறி சில அரசு பேருந்துகளை சுங்கச்சாவடி ஊழியா்கள் நிறுத்தினா். இதனால் சில மணி நேரங்கள் பேருந்துகள் அங்கேயே நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் வேறு வழியின்றி மற்ற பேருந்துகளில் ஏறி சென்றனா். நிறுத்தப்பட்ட சில அரசு பேருந்துகள் ரொக்கமாக சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்திய பின்னா் சுங்கச்சாவடியை கடந்து செல்ல அனுமதித்தனா்.
இது தொடா்பாக சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியா்களிடம் கேட்ட போது, எங்களுடைய அதிகாரிகளும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளா்களும் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாத நிலையில் அரசு பேருந்துகள் சுங்கச்சாவடியை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டது, என கூறினா்.