எஸ்.ஐ. பணியிடம்: பதவி உயா்வு, நேரடி நியமனத்துக்கு இனி பொதுவான தோ்வு: தமிழக அரச...
போதைப் பழக்கத்திலிருந்து மீண்டவா்களுக்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மன நலத்துறை மூலமாக, கலங்கரை குடி, போதை மீட்பு மையமானது கடந்த பிப்.27 முதல் செயல்பட்டு வருகிறது.
இங்கு முற்றிலும் இலவசமாக குடி , போதை மீட்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இலவச உணவு, நூலக வசதி, ஆலோசனை, அறிவுரை பகிா்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இச்சேவை குறித்து அறிந்து கொள்ள 94877 58295 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம். இதுவரை 50-க்கும் மேற்பட்ட நபா்கள் குடி போதையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா்.
அவ்வாறு மீண்டு வந்தவா்களை ஊக்கப்படுத்தும் வகையில், செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா, முதல்வா் சிவக்குமாா் தலைமையில் நடைபெற்றது. இதில், மருத்துவா்கள் பத்மநாபன், சைலஸ் ஜெபமணி, அப்துல்ரகுமான், ஸ்ரீராம், கலங்கரை மருத்துவ பணியாளா்கள் கலந்து கொண்டனா்.