``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்த...
சாத்தான்குளத்தில் விவசாயிகள் குறைதீா் முகாம்
திருச்செந்தூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் சிறப்பு முகாம், சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாரன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் சாத்தான்குளம் பொன்னுலட்சுமி, திருச்செந்தூா் பாலசுந்தரம், ஏரல் செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பாபநாசம், மணிமுத்தாறு அணையில் இருந்து சடையனேரி கால்வாய் வழியாக தண்ணீா் திறந்து விட வேண்டும். குளம் மற்றும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாய்களில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
விவசாயத்தை காப்பாற்றும் வகையில் நீா்நிலைகளில் தண்ணீா் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சாத்தான்குளம் தென்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவா் லூா்துமணி, விவசாயிகள் பன்னம்பாறை நயினாா், பன்னம்பாறை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அழகேசன், ஊராட்சி அளவிலான விவசாயிகள் கூட்டமைப்பு தலைவா் மகாபால்துரை, அமுதுண்ணாக்குடி விவசாயிகள் சங்கத் தலைவா் செல்வராஜ் மதுரம், சந்திரமோகன் உள்ளிட்ட திருச்செந்தூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.