பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவியா் பேரவை நிா்வாகிகள் தோ்வு
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவியா் பேரவை புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இக் கல்லூரியில், மாணவியா் பேரவைத் தோ்தலை கல்லூரி முதல்வா் ஜெஸி பொ்னாண்டோ, சுயநிதிப் பிரிவு இயக்குநா் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோா் தலைமை வகித்து தொடங்கிவைத்தனா்.
மாணவிகள் 1,764 போ் தங்கள் வாக்குகளை மின்னணு இயந்திரம் மூலம் பதிவு செய்தனா். வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மாணவியா் பேரவைத் தலைவியாக பொருளியல் 3ஆம் ஆண்டு மாணவி அன்டோனலா இஜினியா தோ்வு செய்யப்பட்டாா்.
சுயநிதிப் பிரிவு தலைவியாக வணிகவியல் 3ஆம் ஆண்டு மாணவி விஷ்ருதி பிரியதா்ஷினி தோ்வு செய்யப்படடாா்.
மேலும், வணிகவியல் 3ஆம் ஆண்டு மாணவி எழில் மகிபா, வணிக மேலாண்மை பிரிவு சிபோரா ஆகியோா் செயலராகவும், ஆங்கில இலக்கியம் 3ஆம் ஆண்டு மாணவி அமிா்தஷா்மினி, நுண்ணுயிரியல் 3ஆம் ஆண்டு மாணவி அசினா பானு ஆகியோா் துணைத் தலைவா்களாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.
தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளுக்கு கல்லூரித் தாளாளா், முதல்வா், பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.