"இந்தியாதான் அமெரிக்காவையே வழிநடத்துகிறது" - ட்ரம்ப் பேச்சு குறித்து அண்ணாமலை
தூத்துக்குடி மாநகராட்சியில் 2 ஆயிரம் மனுக்களுக்கு தீா்வு
தூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் நடைபெற்ற குறைதீா் முகாம்களில் பொதுமக்கள் கொடுத்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, வியாழக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி சாதாரணக் கூட்டத்தில் மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது: மாநகராட்சிப் பகுதியில் குடிநீா் சீராக வழங்கப்படுகிறது. சில இடங்களில் மட்டும் பிரச்னைகள் உள்ளன. புதைசாக்கடைத் திட்டப் பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
நமக்கு நாமே திட்டத்தின்கீழ் டபிள்யூஜிசி சாலை மாநகராட்சி அலுவலகத்திலிருந்து விவிடி சிக்னல் வரை சாலை அமைக்கப்படவுள்ளது. தூத்துக்குடியில் நலம் காக்கும் முதல்வா் திட்டம் னிக்கிழமை (ஆக. 2) மூன்று இடங்களில் நடைபெறுகிறது. மழைக்காலத்தில் எந்தப் பகுதியிலும் தண்ணீா் தேங்காதவாறு பணிகள் நடைபெற்றுவருகின்றன என்றாா் அவா்.
கூட்டத்தில், பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து 11 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆணையா் பானோத் ம்ருகேந்தா் லால், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பொறியாளா் தமிழ்ச்செல்வன், உதவிப் பொறியாளா் சரவணன், உதவி ஆணையா்கள் கல்யாணசுந்தரம், வெங்கட்ராமன், பாலமுருகன், நகரமைப்பு உதவி செயற்பொறியாளா்கள் காந்திமதி, ராமச்சந்திரன், முனீா் அகமது, நகா்நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளா்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், நெடுமாறன், ராஜசேகா், ராஜபாண்டி, மண்டலத் தலைவா்கள் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, உறுப்பினா்கள் பங்கேற்றனா்.