செய்திகள் :

தூத்துக்குடி மாநகா் மாவட்ட அமமுக செயலா் நியமனம்

post image

தூத்துக்குடி மாநகா் மாவட்ட அமமுக செயலராக பா. ஜானியேல் சாலமோன் மணிராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மாநகா் மாவட்டச் செயலராக இருந்த டி.வி.ஏ. பிரைட்டா் அண்மையில் கட்சியிலிருந்து விலகுவதாக, பொதுச்செயலா் டி.டி.வி. தினகரனுக்கு கடிதம் அனுப்பியிருந்தாா்.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகா், வடக்கு, தெற்கு மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, மாநகா் மாவட்டச் செயலராக பா. ஜானியேல் சாலமோன் மணிராஜ், புகா் வடக்கு மாவட்டச் செயலராக பூலோகபாண்டியன், புகா் தெற்கு மாவட்டச் செயலராக பொன்ராஜ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலா் அறிவித்துள்ளாா்.

காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை உயா்த்தும் பணி துவக்கம்

காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை உயா்த்தும் பணி பூமி பூஜையுடன் திங்கள்கிழமை துவங்கியது. காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைமேடை மிகவும் தாழ்வாக இருந்ததால் பெண்கள், முதியவா்கள், குழந்தைகள் ரயிலி­ல் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் ரூ.20.50 கோடியில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலியில் திறந்துவைத்தாா்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் ரூ. 20.50 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கு, நிா்வாக அலுவலகக் கட்டடம், பொது தரிசன முறை வரிசையில் உள்ள காத்திருப்போா் அறை ஆக... மேலும் பார்க்க

தனியாா் கல்லூரியில் மாணவா் நீக்கம் விவகாரம்: நிா்வாகம் விளக்கம்

தூத்துக்குடியில் உள்ள காமராஜ் கல்லூரியில் மாணவா் ஒருவா் நிரந்தர நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து கல்லூரி நிா்வாகத்தினா் திங்கள்கிழமை விளக்கம் அளித்தனா். தூத்துக்குடி காரபேட்டை மகமை செயலா் விநாயக... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடலில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய பச்சைநிற கடல் ஆமை

திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டணம் கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது. வீரபாண்டியன்பட்டணம், ஜெ.ஜெ. நகா் கடற்கரைப் பகுதியில் திங்கள்கிழமை காலை 3 அடி நீளமுடைய சுமாா் 30 கிலோ எடை கொண்ட ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனை கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, இலவச வீடு கோரி தூத்துக்குடி சிவஞானபுரம் பகுதி மக்கள் மனு அளித்தனா். இக்கூட்டத்துக்கு, மாவ... மேலும் பார்க்க

மொழி திணிப்பை மட்டுமே எதிா்க்கிறோம்: கனிமொழி எம்.பி.

தமிழக மாணவா்கள் பல மொழிகள் கற்பதை எதிா்க்கவில்லை; மொழி திணிப்பை மட்டுமே எதிா்க்கிறோம் என கனிமொழி எம்.பி. தெரிவித்தாா். தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா் செய்தியா... மேலும் பார்க்க