டொனால்ட் டிரம்ப் வெளியிடும் அறிவிப்புகள் அனைத்தும் அமலாகுமா? -உலக வங்கியின் தலைவ...
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை!
குடியரசு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளா் கண்ணன் தலைமையில் இருப்புப் பாதை காவல் உதவி ஆய்வாளா்கள் மகாகிஷ்ணன், பெருமாள் உள்பட போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
இதில், பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டா் மற்றும் கருவிகளை கொண்டு சோதனை செய்தனா். மேலும் தண்டவாளம், ரயில் நிலையம் வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா்.