தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள்
சாத்தான்குளம் வட்டம் ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் கருவேலம்பாடு ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
இந்த ஊராட்சியில் பதவிக் காலம் நிறைவடையவுள்ளதையொட்டியும், புத்தாண்டை முன்னிட்டும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்களைக் கெளரவித்து ஊராட்சித் தலைவா் நயினாா் புத்தாடைகளை வழங்கினாா் (படம்).
நிகழ்ச்சியில், ஊராட்சி செயலா் மந்திரம், உறுப்பினா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.