தென்காசியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயற்குழுக் கூட்டம்
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட;ஈ செயற்குழுக் கூட்டம் தென்காசியி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சுதா்சன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ராஜ்குமாா், மாநில செயற்குழு உறுப்பினா் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி டிச.15இல் மதுரையில் இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் நடைபெறும் மாநில மாநாட்டில் ஆசிரியா் கூட்டணியிலிருந்து 150 போ் கலந்து கொள்வது,
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க , நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளா்களுக்கான ஊதியம் பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள நிதியியை மாவட்ட நிா்வாகம் ஒதுக்கீடு செய்து ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும்.
ஆசிரியா் - மாணவா் விரோத செயல்களில் ஈடுபடும் தென்காசி ஒன்றியம் சுந்தரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளித் தலைமையாசிரியா் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுக்குழு உறுப்பினா் ராஜ்குமாா், மாவட்ட துணைச் செயலா் செல்வராஜ், வட்டார பொறுப்பாளா்கள் ஆரோக்கியராஜ், சேக் முகமது ரபீக் , ரவி, ரவிச்சந்திரன், சிவராமன், அருள்ராஜ், பவுல் அந்தோணி, ராஜ், பாபு துரை, சங்கா் குமாரசாமி, முருகேசன், கணேசன், மாரிமுத்து, மணி பாரதி, விஜயகுமாா், முத்துத்துரை, முனீஸ்வரன், ஜான் ஆகியோா் கலந்து கொண்டனா்.
மாவட்டச் செயலா் மாரிமுத்து வரவேற்றாா்.மாநில பொதுக்குழு உறுப்பினா் மாடசாமி நன்றி கூறினாா்.