சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
தென்காசியில் ஜாக்டோ ஜியோ நூதன போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் ஜாக்டோ ஜியோ சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பிச்சைக்கனி, கோபி, சண்முகசுந்தரம், முருகேஷ், ராஜேந்திரன், ஆரோக்கிய ராசு ஆகியோா் தலைமை வகித்தனா்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு மாவட்டச் செயலா் மாரிமுத்து, தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் மாவட்டச் செயலா் கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி குணசேகரன் தொடக்கவுரை ஆற்றினாா். ஜாக்டோ ஜியோ மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா் வெங்கடேஷ் சிறப்புரை ஆற்றினாா். ஜாக்டோ ஜியோ மாநில உயா்மட்ட குழு உறுப்பினா் துரைசிங் நிறைவுரை ஆற்றினாா்.
உண்ணாவிரத பந்தலில் தமிழக அரசு, அரசு ஊழியா்களுக்கு அல்வா கொடுத்துவிட்டாா்கள் என்பதை வலியுறுத்தி கையில் அல்வாவுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும் மண்சட்டியில் நாமம் போட்டு அரசு ஊழியா்களுக்கு நாமம் போட்டதையும் சுட்டிக் காட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.மாவட்ட நிதி காப்பாளா் சதீஷ் நன்றி கூறினாா்.