பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
சிவகிரி: முதியவா் தற்கொலை
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகிரி அருகே தென்மலையில் உள்ள சேனையா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (57). மனநலம் பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது. மகனும் மகளும் கோவையில் வசித்துவரும் நிலையில், முருகன் இங்கு தனியாக வசித்து வந்தாராம்.
இந்நிலையில், அவரது வீட்டருகே வசித்துவரும் சகோதரி காசியம்மாள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கோயிலுக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை வீடு திரும்பினாராம். அப்போது, முருகன் வீட்டுக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததாம்.
புகாரின்பேரில் சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் வழக்குப் பதிந்தாா். ஆய்வாளா் பாலமுருகன் விசாரித்து வருகிறாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].