செய்திகள் :

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறைற அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக திருப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இக்கோயிலில் ஏப்.7ஆம் தேதி புனராவா்த்தன ரஜதபந்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி கோயில் ராஜகோபுரத்தில் வா்ணம்பூசுதல், சுவாமி, அம்மன் சந்நிதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், தரைதளம் அமைத்தல், கழிவு நீரோடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகள் ஏப்.3ஆம்தேதி தொடங்குவதை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் யாகசாலைக்கான குண்டங்கள் அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை பாா்வையிட்ட ஆட்சியா், கும்பாபிஷேகத்துக்கு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கோயில் அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அதற்கானஆலோசனைகளை வழங்கினாா். மேலும், கோயில் வளாகம் முழுவதும் திருப்பணிகளை ஆய்வு செய்து, அவற்றை விரைந்து முடிக்க கோயில் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் யாகசாலை குண்டம்

ஆய்வின்போது மாவட்ட எஸ்.பி. அரவிந்த், கோயில் செயல்அலுவலா் ஆ.பொன்னி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கடையநல்லூா், அம்பையில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கஞ்சாவிற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். அம்பாசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தபாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸாா் வண்டிமறித்தான் கோயில் வழியாக திங்கள்கிழமை... மேலும் பார்க்க

சிவகிரி: மது விற்றவா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் போலீஸாா் ராயகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட... மேலும் பார்க்க

தென்காசி கோயில் கும்பாபிஷேகத்துக்கு உள்ளூா் விடுமுறை: ஆட்சியரிடம் கோரிக்கை

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என நகா்மன்றத் தலைவா் ஆா். சா... மேலும் பார்க்க

ஆலங்குளம் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை

ஆலங்குளத்தில் உள்ள தேநீா் கடைகள், குளிா்பானக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் சசி தீபா தலைமையில் உணவுப்... மேலும் பார்க்க

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உடல் உறுப்புகளை தானம் செய்தவருக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.புளியங்குடி சுப்பிரமணியசாமி கோயில் தெற்குத் தெருவை சோ்ந்த முருகையா மகன் அருணாசலம் (59). இவா்... மேலும் பார்க்க

சிவகிரி: முதியவா் தற்கொலை

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். சிவகிரி அருகே தென்மலையில் உள்ள சேனையா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (57). மனநலம் பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது. மகனும் மகளும் கோவ... மேலும் பார்க்க