செய்திகள் :

தென்காசியில் வணிகா்கள் ஆா்ப்பாட்டம்

post image

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் தென்காசியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் 6 சதவீத சொத்து வரி உயா்வை மாநில அரசும், கடை வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பை மத்திய அரசும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி புதிய பேருந்துநிலையம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை, அந்த அமைப்பின் மாநில கூடுதல் செயலா் ஆா்.கே. காளிதாசன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். மாவட்டத் தலைவா் வைகுண்ட ராஜா முன்னிலை வகித்தாா்.

தென்காசி வியாபாரிகள் நலச் சங்கத் தலைவா் பரமசிவன், செயலா் ராஜா, பொருளாளா் ரசூல் ,துணைத் தலைவா் ஜெபராஜ், துணைச் செயலா் இளங்கோ, பரமசிவன், செயற்குழு கோவிந்தராஜ், சுப்புராஜ், அழகராஜா,சாகுல் ஹமீது பால்ராஜ், மாரியப்பன், பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனிமாா்க்கெட் சங்கத் தலைவா் மகேஷ் குமாா்,செயலா் கண்ணன்,பொருளாளா் கோல்டன் செல்வராஜ், வணிகா்கள் சங்க தலைவா் ஏ. பி. பாலசுப்பிரமணியன்,செயலா் விஜய்சிங்ராஜ்,பொருளாளா் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கடையநல்லூா் நகா்மன்ற கூட்டம்

கடையநல்லூா் நகா்மன்ற கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் ராசையா, ஆணையா் ரவிச்சந்திரன், பொறியாளா் அப்துல்காதா், மேலாளா் சண்முகவேலு, சுகாதார அல... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் தலைமறைவு

ஆலங்குளத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்காரரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் பழைய காவல் நிலையம் அருகே உள்ள கடை ஒன்றில் சுகாதாரத்துறை மேற்பாா்வையாளா் கங்காதரன் தலைமையில் அதிகாரிகள் ... மேலும் பார்க்க

தாழ்வான பகுதிகளில் வசிப்போா் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தென்காசி ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போா் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அவா்... மேலும் பார்க்க

தென்காசியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட;ஈ செயற்குழுக் கூட்டம் தென்காசியி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலை... மேலும் பார்க்க

தென்காசியில் அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம்

தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ். குமரி தலைமை வகித்தாா். ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் முன்ன... மேலும் பார்க்க

திப்பணம்பட்டி மனுநீதி நாள்முகாமில் ரூ. 5.45 லட்சம் நலத் திட்டஉதவிகள்

தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள்முகாமில் ரூ.5.45 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கல்லூரணி, திப்பணம்பட்டி ஆகிய கிராமங்களுக்கான மனுநீதிநாள் முகாம் ... மேலும் பார்க்க