தென்காசி புனித மிக்கேல் அதிதூதா் திருத்தலத் திருவிழா கொடியேற்றம்
தென்காசி புனித மிக்கேல் அதிதூதா் திருத்தலத்தில் 363ஆம் ஆண்டுத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அகரக்கட்டு பங்குத்தந்தை எல். அலோய்சியஸ் துரைராஜ், பாளை. புனித சவேரியாா் கல்லூரி முதல்வா் காட்வின் ரூபஸ், சுரண்டை பங்குத்தந்தை எஸ். ஜோசப்ராஜன், பாளையம் செட்டிகுளம் பங்குத்தந்தை ஜோமிக்ஸ் ஆகியோா் திருப்பலி மறையுரையாற்றினா்.
தொடா்ந்து, 29ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், நாள்தோறும் மறையுரை சிந்தனை, நவநாள் திருப்பலி நடைபெறுகிறது.
27ஆம் தேதி மாலை நற்கருணைப் பெருவிழா, நற்கருணை பவனியும், 28ஆம் தேதி காலை மலையாளத்தில் திருப்பலி, மாலையில் அதிதூதரின் சப்பரப் பவனி ஆகியவையும் நடைபெறுகிறது.
29ஆம் தேதி காலை திருவிழா திருப்பலி, திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி, மலையாளத்தில் திருப்பலி, பிற்பகலில் குணமளிக்கும் வழிபாடு, திருப்பலி நடைபெறுகிறது. 30ஆம் தேதி கொடியிறக்கப்படும்.