திமுக கவுன்சிலரின் கைத்துப்பாக்கியை திருடிய 2 பேர் கைது.. திருச்சி ஹோட்டலில் நடந...
தென்தாமரைக்குளம் பதியில் சித்திரைத் திருவிழா கலிவேட்டை!
அகிலத் திரட்டு அம்மானை அருளப்பட்டதென்தாமரைக்குளம் அய்யா வைகுண்டசாமி பதியில் சித்திரைத் திருவிழாவின் 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு கலிவேட்டை நடைபெற்றது.
இத்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிவலம் வந்து, கலிவேட்டையாடுதல் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, 11ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (ஏப். 28) அதிகாலை 5.30 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை, 6 மணிக்கு உகப்பாட்டு, 9.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். நண்பகல் 12.30 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 6 மணிக்கு பணிவிடை, 6.30-க்கு அய்யா ரிஷப வாகனத்தில் பதிவலம் வருதல், இரவு 8 மணிக்கு அன்ன தா்மம் ஆகியவை நடைபெறும்.