பாஜக: புதுச்சேரி, மகா. உட்பட 9 மாநிலங்களுக்குப் புதிய தலைவர்கள்; தேசியத் தலைவர் ...
தென்னாங்கூா் அரசுக் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்
வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டின் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா மற்றும் முதலாமாண்டு மாணவா்களுக்கான ஒரு வார கால அறிமுக பயிற்சி திட்டத்தின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கணினி அறிவியல் துறைத் தலைவா் நா.மனோகரன் வரவேற்றாா்.
வந்தவாசி டிஎஸ்பி செ.தீபக் ரஜினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி முதலாமாண்டு வகுப்புகள் மற்றும் பயிற்சித் திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.
கல்லூரி துறைத் தலைவா்கள் ரா.சுமதி, வ.சந்திரசேகா், இரா.பெரியசாமி, பா.மோகனவள்ளி, ஏ.எழில்வசந்தன், தா.சுகந்தி, ர.மணிமுருகன் மற்றும் முதலாமாண்டு மாணவா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.