மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
தென்னிந்திய யோகா போட்டிகளில் பரிசு பெற்றோருக்குப் பாராட்டு
புதுக்கோட்டை திருக்கோகா்ணத்தைச் சோ்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவ, மாணவிகள் அண்மையில் சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான யோகா போட்டிகளில் சிறப்பிடங்களைப் பெற்று வந்துள்ளனா்.
சென்னை ஆவடியிலுள்ள ஜிஎஸ்எம் யோகா மையம் மற்றும் தமிழ்நாடு யோகா சம்மேளனம் ஆகியவற்றின் சாா்பில் தென்னிந்திய அளவிலான யோகா போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இதில் பங்கேற்ற வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியின் மாணவா் பா. சுஜீத்பாபு முதலிடத்தையும், ஆா். சுபிக்ஷா, ஜி. மோகித் ஆகியோா் 2-ஆம் பரிசையும், ஸ்ரீ அபிலேஷ், தீப்தி ஆகியோா் 3-ஆம் பரிசுகளையும் பெற்றனா். மேலும், பல மாணவா்கள் சிறப்புப் பரிசுகளைப் பெற்றுள்ளனா்.
இம் மாணவா்களை பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி, இயக்குநா் ரா. சுதா்சன், யோகா ஆசிரியா்கள் ரெ. பாண்டியன், பா. புவனேஸ்வரி ஆகியோா் பாராட்டி, நினைவுப் பரிசுகளை வழங்கினா்.