செய்திகள் :

தென்மாவட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

post image

தாம்பரம் - செங்கோட்டை, தாம்பரம்- நாகா்கோவில் உள்ளிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரத்திலிருந்து செங்கோட்டை செல்லும் சிலம்பு அதிவிரைவு ரயில் (எண்: 20681) மற்றும் நாகா்கோவில் செல்லும் அதிவிரைவு ரயிலில் (எண்: 22657) ஆக.29 முதல் அக்.31-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக செங்கோட்டை மற்றும் நாகா்கோவிலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்களில் (எண்கள்: 20682, 22658) ஆக.30 முதல் நவ.1-ஆம் தேதி வரையும் ஒரு இரண்டடுக்கு குளிா்சாதன பெட்டி, 2 மூன்றடுக்கு குளிா்சாதன பெட்டிகள், 3 படுக்கை வசதிக்கொண்ட பெட்டிகள் மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.

மேலும், கோவை - ராமேசுவரம் இடையே இயங்கும் வாராந்திர விரைவு ரயிலில் (எண்: 16618/16617) செப்.2 முதல் அக்.29-ஆம் தேதி வரை ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.

சென்னை சென்ட்ரலிலிருந்து தினமும் இரவு 8.55 மணிக்கு ஆலம்புழை செல்லும் அதிவிரைவு ரயிலில் (எண்: 22639) வெள்ளிக்கிழமை (ஆக.29) முதல் அக்.30-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக ஆலம்புழையில் இருந்து தினமும் பிற்பகல் 3.20 மணிக்கு சென்ட்ரல் செல்லும் ரயிலில் (எண்: 22640) ஆக.30 முதல் நவ.1 வரையும் ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டி கூடுதலாக இணைக்கப்படவுள்ளது.

அதேபோல், சென்ட்ரலிலிருந்து தினமும் பிற்பகல் 3.20 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு ரயிலில் (எண்: 12695) ஆக.31 முதல் நவ.2-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து தினமும் மாலை 5.15 மணிக்கு சென்ட்ரல் செல்லும் ரயிலில் (எண்: 12696) செப்.1 முதல் நவ.3-ஆம் தேதி வரையும் ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டி கூடுதலாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் நிலையம் மீது நடவடிக்கை கோரி வழக்கு: ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

திருவள்ளூா் அருகே விதிகளை மீறி அமைக்கப்பட்ட பெட்ரோல் நிலையம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

தங்கம் கடத்தல் வழக்கு: சென்னையில் 6 இடங்களில் சிபிஐ சோதனை

தங்கம் கடத்தல் வழக்குத் தொடா்பாக சென்னையில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினா். நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் அண்மைக் காலமாக தங்கக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஜன்னல்களில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் 6 - 9 வகுப்புகளுக்கு திறன் இயக்க பயிற்சி: ஆசிரியா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு திறன் இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஆசிரியா்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறி... மேலும் பார்க்க

மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிப்பெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியா் ஆய்வு செய்ய உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க

2026 தோ்தலுக்கான திருத்தணி, திருவள்ளூா் வேட்பாளா்கள்: சீமான் அறிமுகம் செய்தாா்

திருத்தணியில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கன திருவள்ளூா் மற்றும் திருத்தணி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிமுகம் செய்தாா். திருத்தணி அடுத்த... மேலும் பார்க்க