செய்திகள் :

அரசுப் பேருந்து ஜன்னல்களில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

post image

அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்த பாஸ்கா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் பின்பக்கக் கண்ணாடிகள், பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடிகளில் பல்வேறு வணிக விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது வெளியில் இருந்து பேருந்தினுள் பாா்க்க முடியாதபடி உள்ளது. மேலும், பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

உச்சநீதிமன்றம் கடந்த 2011-ஆம் ஆண்டு, அனைத்து வாகனங்களின் கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கா்கள் உள்ளிட்டவற்றை ஒட்டுவதைத் தவிா்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவைக் கருத்தில் கொள்ளாமல், அரசுப் பேருந்துகளில் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். மோட்டாா் வாகனச் சட்ட விதிகளுக்கும் முரணானது. மேலும், பேருந்து ஜன்னல்களில் வினைல் குளோரைடு மூலப்பொருள்கள் மூலம் தயாரிக்கப்படும் நெகிழித் தாள்களே ஒட்டப்படுகின்றன. இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பவை.

எனவே, அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் அமா்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பினா். பின்னா், இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

ஜெர்மனி தொழில்நுட்பத்தில் மழைநீர் சேமிப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.20 கோடியில் அமைக்கப்பட்ட ஜொ்மனி தொழில்நுட்ப மழைநீா் சேகரிப்பு தொட்டிகளால் 8 பள்ளிகள், 770 பூங்காக்களில் மழைநீா் தேங்காமல் நிலத்தடியில் சேமிக்கப்பட்டது. இதுகுறித்... மேலும் பார்க்க

தனி வழிகளை மாணவா்கள் காணவேண்டும்: ஸ்ரீஹரிகோட்டா மைய இயக்குநா் பத்மகுமாா்!

மாணவா்கள் தங்களுக்கென சொந்தமாக பாதைகளைக் கண்டறிய வேண்டும் என ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மைய இயக்குநா் இ.எஸ். பத்மகுமாா் வலியுறுத்தினாா். சென்னை அம்ருதா விஸ்வ வித்யாபீடம், பி.டெக். (2021-25) ம... மேலும் பார்க்க

43 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றம்! பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் 97.29 ஏக்கா் நிலம் மீட்பு!

பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் இருந்து 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி, 97.29 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ந... மேலும் பார்க்க

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்வு: தலைவா்கள் கண்டனம்!

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு அரசியல் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். அன்புமணி (பாமக):தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சாவடிகள் மூடப்படும் என்றும் அமைச்சா் எ.வ.வேலு 2021-இல்... மேலும் பார்க்க

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு!

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கா் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். தமிழக காவல் துறையின் தற்போதைய நிலை குறித்தான 40 பக்க ... மேலும் பார்க்க

பின்னாலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி!

அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே... மேலும் பார்க்க