செய்திகள் :

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சி: அமெரிக்காவின் ரூ.394 கோடி நிதியுதவி நிறுத்தம்

post image

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சிக்கான 46 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.394 கோடி) நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுமாா் 77 லட்சம் போ் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனா். உலகிலேயே அந்த நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் ஹெச்ஐவி நோயாளிகள் உள்ளனா்.

இந்நிலையில், சா்வதேச வளா்ச்சிக்கான அமெரிக்க முகமை (யுஎஸ்எயிட்), அமெரிக்க அதிபரின் எய்ட்ஸ் நிவாரண அவசர திட்டம் (பெப்ஃபாா்) மூலம், அமெரிக்காவிடம் இருந்து ஆண்டுக்கு சுமாா் 400 மில்லியன் டாலரை (ரூ.3,400 கோடி) தென் ஆப்பிரிக்கா பெற்று வந்தது. இந்த நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

அத்துடன் தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி மருத்துவப் பரிசோதனைகளை, ஒரு வாரத்தில் விஞ்ஞானிகள் தொடங்கவிருந்த வேளையில், அந்தத் திட்டத்துக்கு அமெரிக்காவின் 46 மில்லியன் டாலா் நிதியுதவியும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தத் தடுப்பூசி ஆராய்ச்சிப் பணிகளை நிறுத்துமாறு அமெரிக்க அரசிடம் இருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள சிறுபான்மை வெள்ளையின ஆப்பிரிக்கா் சமூகம் கொடுமைக்குள்ளாவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறாா். அத்துடன் அமெரிக்காவின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாகவும் அவா் அறிவித்துள்ளாா்.

இந்தச் சூழலில், தென் ஆப்பிரிக்காவுக்கான நிதியுதவி, குறிப்பாக ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சிக்கான நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்தத் தடுப்பூசி ஆராய்ச்சித் திட்டத்துக்கு தலைமை வகிக்கும் கிளென்டா கிரே கூறுகையில், ‘ஹெச்ஐவிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் ஆப்பிரிக்க கண்டம் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இதை ஆப்பிரிக்க கண்டம் தொடா்ந்து செய்ய முடியாத வகையில், அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா்.

ஹெச்ஐவி பாதிப்பை தடுக்க கண்டுபிடிக்கப்பட்டுள்ள லெனாகாபவிா் மருந்தை ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே செலுத்திக்கொள்ள வேண்டும். இந்த மருந்தைப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிா்வாக அமைப்பு அண்மையில் அனுமதி அளித்தது. இளம் தென் ஆப்பிரிக்கா்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அந்த மருந்தின் செயல்திறன் வெளிக்காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் கடும் சண்டை: ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்!

சிரியாவில் கடும் சண்டை மூண்டுள்ள நிலையில், அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள ராணுவ தலைமையகம் இன்று(ஜூலை 16) குறிவைத்து தாக்கப்பட்டத... மேலும் பார்க்க

இராக்கின் மற்றொரு எண்ணெய் வயல் மீது தாக்குதல்! ட்ரோன்களை இயக்கும் மர்ம நபர்கள் யார்?

இராக் நாட்டிலுள்ள மற்றொரு எண்ணெய் வயலின் மீது ட்ரோன்கள் மூலம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இராக்கின் பல்வேறு மாகாணங்களிலுள்ள எண்ணெய் வயல்களின் மீது கடந்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை புரட்டிப் போடும் கனமழையால் திடீர் வெள்ளம்! 116 பேர் பலி!

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால், ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், அந்நாடு முழுவதும் சுமார் 116 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில், கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல... மேலும் பார்க்க

டிரம்ப்பின் எதிர்ப்பை மீறும் ரஷியா! 400 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல்!

உக்ரைன் மீது ரஷியா ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர்நிறுத்ததுக்கு, 50 நாள்களு... மேலும் பார்க்க

ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை!

ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இந்தியா, சீனா, பிரேசியல் ஆகிய நாடுகள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நேட்டோ பொதுச் செயலர் மார்க் ரூட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பார்க்க

கடந்த ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை: ஐ.நா. தகவல்

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என்று ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். முந்தைய ஆண்டும் இதே எண்ணிக்கையில... மேலும் பார்க்க