ஆய்வுக்கூட கருத்தரித்தல் முறை விரிவாக்கம்: கையெழுத்திட்டார் டிரம்ப்!
தெற்கு சைபீரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தெற்கு சைபீரியாவில் உள்ள ரஷியாவின் அல்தாய் குடியரசில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ரஷிய நிலஅதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ரஷிய நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
இந்த நிலநடுக்கமானது சனிக்கிழமை காலை 8:48 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவானது.
அண்டை மாகாணங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால் உயர் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. பொது நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் நிலநடுக்க மையப்பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளில் நீர் விநியோகத்தில் சிக்கல்கள் உள்ளதால் அவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஒரு சில பகுதிகளில் சிறியளவிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், ஆனால் இணையதளத்தில் வதந்திகள் பரவி வருவதைப் பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.