சென்னை எழும்பூா் வழியாகச் செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
தெலங்கானா: மத அடையாளங்களை அகற்றக் கூறி மாணவர்களை தாக்கிய பள்ளி முதல்வர் - கொதித்தெழுந்த பெற்றோர்கள்!
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள கோண்டோர் ஷைன் பள்ளியில் நடந்த ஒரு சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் முதல்வர் லட்சுமய்யா, மாணவர்கள் நெற்றியில் பொட்டு வைத்திருந்ததைக் கண்டித்து, அதை அகற்றும்படி கட்டாயபடுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், சில மாணவர்களை கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவர்களது மத அடையாளத்தை நீக்கச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. மாணவர்களை அடித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் பெற்றோர்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. இதனால் அவர்கள் பள்ளிக்கு முன்பு கூடி போராட்டம் நடத்தினர். இதற்கிடையில், முதல்வர் லட்சுமய்யா பள்ளிக்கு வராமல் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக, பள்ளித் தலைவர் (Chairman) மல்லா ரெட்டி, "ஒரு மாணவர் தனது மத அடையாளத்துடன் இருப்பதற்கு அவருக்கு உரிமை உள்ளது. அதை அகற்ற சொல்லி அவரை அடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது." என அவர் கூறினார்.
மேலும், மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, முதல்வரை உடனடியாக பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.
பள்ளி நிர்வாகம், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது. அனைத்து மதத்தினருக்கும் சமத்துவமான கல்வி பெறுவதற்கான பாதுகாப்பான சூழல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.