செய்திகள் :

தெலுங்கில் தோல்வியடைந்த மத கஜ ராஜா!

post image

நடிகர் விஷால் நடித்த மத கஜ ராஜா திரைப்படம் தெலுங்கில் கவனம் பெறவில்லை.

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகள் கழித்து பொங்கல் வெளியீடாக ஜன.12-ல் வெளியானது.

இதையும் படிக்க: விடாமுயற்சி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

நடிகர்கள் விஷால், சந்தானம், மனோபாலா ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கவனம் பெற்றதால் படம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.

ஆச்சரியமாக ரூ. 50 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர். சி - விஷால் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது.

ஆனால், மத கஜ ராஜா திரைப்படத்தின் தெலுங்கு வடிவம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறாததால் தெலங்கானா மற்றும் ஆந்திரத்தில் ரூ. 2 கோடி வரை மட்டுமே வசூலித்திருக்கிறதாம். இதனால், மத கஜ ராஜா தெலுங்கில் வணிகத் தோல்வியைச் சந்தித்துள்ளது.

இன்று இனிய நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.15-02-2025சனிக்கிழமைமேஷம் இன்று மரியாதை நிமித்தமாக உயர்ந்தோரை சந்தித்து பெருமையடைவீர்... மேலும் பார்க்க

ஹைதராபாதை வீழ்த்தியது ஒடிஸா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி 3-1 கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. ஒடிஸாவுக்கு இது 7-ஆவது வெற்றி; ஹைதராபாதுக்கு இது 12-ஆவது தோல்வி. இந்த... மேலும் பார்க்க

மூனி, காா்டனா் அதிரடி: குஜராத் 201/5

மகளிா் பிரீமியா் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருக்கு எதிராக குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் சோ்த்தது. இந்த ... மேலும் பார்க்க

உயிர் பத்திக்காம... வா வாத்தியார் படத்தின் முதல் பாடல் வெளியானது!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. கார்த்தி நடிப்பில் கடைசியான வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமானது.இதனைத் தொடர... மேலும் பார்க்க