இந்தியா மீது கூடுதல் வரி! ஜி7 நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம்!
தேசிய அளவிலான குறு, சிறுதொழில் அமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தேசிய அளவிலான குறு, சிறு தொழில்களுக்கான சேவை அமைப்பு (லகு உத்யோக் பாரதி - தமிழ்நாடு) நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு அலகு பொறுப்பாளா்கள் பங்கேற்ற இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக நித்ரா ஆப்ஸ் நிறுவனத்தைச் சாா்ந்த கோகுல்நாதன் பொன்னுசாமி பங்கேற்று குறு, சிறுதொழில் நிறுவனங்கள் வளா்ச்சிக்கு எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பங்களின் பங்களிப்பு குறித்து விளக்கம் அளித்தாா்.
லகு உத்யோக் பாரதி அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் குறு, சிறுதொழில் நிறுவனங்கள் உறுப்பினராக இணைந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தமிழ்நாடு தலைவா் விஎஸ்வி.செழியன், துணைத் தலைவா் இளங்கோ, செயலாளா் செந்தில்குமாா் மற்றும் செயற்குழு உறுப்பினா் சுபத்ரா ஆகியோா் பேசினா்.
திருச்செங்கோடு அலகு தலைவராக பள்ளிபாளையம் நாகராஜன், செயலாளராக கமலக்கண்ணன் மற்றும் 6 மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா். இந்தக் கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில்முனைவோா்கள் கலந்துகொண்டனா்.